உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் ரஷ்யாவிற்கு நேற்று துணைப்பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

தஷ்கென்ட், ஜூன் 22-

அனைத்துலக அளவிலான எரிசக்தி மற்றும் நீர் துறைகளில் மலேசியாவின் வியூக பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் மேற்கொண்டிருக்கும் அலுவல் பயணங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூன் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த அலுவல் பயணத்தில் கலந்துகொள்ளும் மலேசிய பேராளர்களுக்கு எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான அவர் தலைமையேற்கிறார்.நேற்று காலை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த ஃபடில்லாவை உஸ்பெகிஸ்தான் - ரஷ்யாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் அந்நாட்டின் எரிசக்தி துணை அமைச்சர் அசிஸ்கோஜா கோபிலோவ் வரவேற்றார்.

நேற்று தொடங்கி ஜூன் 24ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தானுக்கான பயணத்தில் அதிபர் ஷவ்கட் மிர்சியோயேவ்வையும் ஃபடில்லா சந்திக்கவுள்ளார்.இதில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் எரிசக்தி உட்பட நிலையான வளர்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடு குறித்து உஸ்பெகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் ஜுராபெக் மிர்சாமக்முடோவ் உடனான சந்திப்பில் விவாதிக்கப்படும்.

அதனையடுத்து, ஜூன் 25இல் இருந்து ஜூன் 28ஆம் தேதி வரை ரஷ்யாவிற்கான தமது பயணத்தைத் தொடரும் ஃபடில்லா, அந்நாட்டின் துணைப்பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கைச் சந்தித்து எரிசக்தி துறையில் வியூக ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவிருக்கிறார்.

Menteri Fadillah Yusof mengetuai delegasi Malaysia ke Uzbekistan dan Rusia bagi memperkukuh kerjasama strategik dalam bidang tenaga dan air. Lawatan ini dijangka memperluas pelaburan, teknologi serta pembangunan mampan berkaitan tenaga boleh diperbaharui.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *