இன்றைய வைகுண்ட ஏகாதசியில் செய்ய வேண்டியவை..செய்ய கூடாதவை..

top-news
FREE WEBSITE AD

இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு. தமிழ் மாதங்களில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தை அடுத்து 11வது நாள் ஏகாதசி திதி அனுசரிக்கப்படுகிறது.பொதுவாக ஏகாதசி திதி சிறப்பானவை என்றாலும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகிறோம்.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் மறந்தும் இறைச்சி உண்ணாதீங்க. சரணாகதி அடைவதற்கான தினத்தில் உயிர்கொலை தவறு. இன்று அசைவ உணவைத் தவிர்த்திடுங்க. அதே போன்று இன்று ஒரு நாள் சாந்தமாகவும், அமைதியாகவும் பிரார்த்தனை செய்ய பழகுங்க. பொய் சொல்லுதல், கோபத்தை வெளிப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்த்திடுங்க. உங்கள் குழந்தைகளே ஆனாலும் இன்று அடிக்காதீங்க. அவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்பதற்காக உங்களுக்கு அடிக்க அனுமதிக்கப்படவில்லை. கூடுமானவரையில் இன்று எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்த தினத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து வைகுண்ட வாசல்வழியாக வரும் திருமாலை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கப் பெறுவதாக ஐதீகம்.தாய்க்கு நிகரான தெய்வம் இல்லை. காயத்ரி மந்திரத்துக்கு ஈடான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கும் ஈடான விரதமும் இல்லை என்கிறது நமது புராணங்கள். அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் ஏகாதசி விரதம் என்கிறது புராணங்கள்.

மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்வார்கள். அனைத்து ஏகாதசியிலும் விரதமிருந்து பெறும் பலனை இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருந்தாலே கிடைத்து விடுகிறது என்கிறது விஷ்ணுபுராணம்

விஷ்ணு காக்கும் கடவுள் அவருடைய காதுகளில் இருந்து வெளிவந்த அசுரர்களாகிய மது , கைடபர் இருவரும் தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர். பகவானிடம் முறையிட அவர்களுடன் போரிட தொடங்கினார். இருவரும் விஷ்ணுவின் பாதத்தில் சரணடைந்தனர். "பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு கருணை காட்ட வேண்டும்." என வேண்டினர்.

அத்துடன் "எம்பெருமானே தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வடக்கு வாசல் வழியாக, வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்" எனகேட்டுக் கொண்டனர் .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது .

இந்நாளில் "ஓம் நமோ நாராயணாய" என வாயால் உச்சரித்து, மனதால் பிரார்த்தனை செய்து பாவங்கள் நீங்கப் பெற்று, ஸ்ரீமகாலஷ்மியின் பேரருளை பெறுவோம்.வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இம்மையிலும், மறுமையிலும் அவன் பேரருளை பெறலாம்.
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *