சொத்துக்களில் தடைகள் விலகணுமா?

- Muthu Kumar
- 03 Mar, 2025
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கும்.ஆனால், அனைவருக்குமே சொந்த வீடு அமைந்துவிடுவதில்லை.சொந்த நிலம் வைத்திருந்தும்கூட, அங்கே வீடு கட்ட முடியாத அளவுக்கு தடங்கல்கள், சிக்கல்கள் இருக்கலாம். இதற்கு எளிய பரிகாரங்கள் கை கொடுக்கின்றன. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வரும்போது, அதன் பலனை காண முடியும்.
சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், அல்லது நிலம், வீடு வாங்க முயன்றாலும், அதில் சிக்கல் உள்ளது என்று நினைப்பவர்கள், முருகப்பெருமானை வணங்கி வரவேண்டும்.ஏனென்றால், நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு "பூமிகாரகன்" என்பார்கள்.செவ்வாயினுடைய அதிதேவதை முருகன் என்பதால், சொந்த வீடு மனை உள்ளிட்டவைகளை முருகனிடம் முறையிடலாம்.
அகல் விளக்கு பரிகாரம்
அதேபோல, சிறுவாபுரி கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வேண்டி கொண்டால், எளிதில் வழிகிடைக்கும். செவ்வாய் பகவானுக்கு உரிய செவ்வாய் அல்லது ஞாயிறுகளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் இன்னும் சிறப்பு அல்லது, வீட்டின் பூஜை அறையிலேயே முருகர் படத்திற்கு முன்பு, ஒரு அகலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து வணங்கி வரலாம்.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால், அல்லது நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாத பிரச்சனை இருந்தால், மண் அகல் விளக்கில் எளிய பரிகாரம் செய்யலாம்.. உதாரணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்கிறீர்கள் என்றால், முந்தைய நாளே புதிதாக மண் விளக்கு வாங்கி, அதை மஞ்சள் நீரில் கழுவி, மஞ்சள் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைக்க வேண்டும்
சொந்த நிலத்தில் வீடு
இந்த விளக்கில் மஞ்சளை, காய்ச்சாத பசும்பால் 2 சொட்டு சேர்த்து குழைத்து வைத்துவிட வேண்டும். மறுநாள் திங்கட்கிழமை காலையில் குளித்து முடித்து, குழைத்து வைத்துள்ள திலகத்தினை, நெற்றியில் வைத்து, பிரார்த்திக்கலாம். 11 திங்கட்கிழமைகளுக்கு இப்படி செய்துவரும்போது, சொந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.
அல்லது ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து, சொந்த வீடு குறித்த உங்கள் பிரார்த்தனையை சொல்லி வாமனரை வழிபடவேண்டும். பிறகு, அந்த விளக்கை வீட்டில் தென்மேற்கு மூலையில் ஏற்றி வைக்க வேண்டும். மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று இந்த விளக்கை ஏற்றினால் இன்னும் சிறப்பு.
நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை
அதேபோல, உங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்க வேண்டுமானால், செவ்வாய்கிழமைகளில் எளிய பரிகாரம் ஒன்று செய்யலாம். விற்கப்பட உள்ள நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை, ஒரு மஞ்சள் துணியில் வைத்து, 1 ரூபாய் நாணயங்கள் 6 வைத்து, முடிச்சு போல கட்டி பூஜை அறையிலுள்ள முருகர் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
அடுத்து வரக்கூடிய வியாழன் அல்லது பௌர்ணமி நாளில், அந்த முடிச்சினை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். முடிச்சில் உள்ள 1 ரூபாய் நாணயங்களை அங்குள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு, மூட்டையிலுள்ள மண்ணையும், மஞ்சள் துணியையும், திருச்செந்தூர் கடலில் கரைத்து விட்டுவர வேண்டும். இப்படி செய்வதால், உங்கள் நிலத்தை நல்ல விலைக்கு விற்கலாம் அல்லது விற்பனையில் தடை இருந்தாலும் நீங்கிவிடுமாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *