எம்ஏசிசி செல்லும் வழியில் சகோதரி கடத்தப்பட்டார்- சகோதரர் புகார்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மே 3-

புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், தமது சகோதரி பமேலா லிங் (வயது 42) காணாமல் போனதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஒரு விசாரணையின் தொடர்பில் கடந்த மாதம் 9ஆம் தேதியன்று எம்ஏசிசி அதிகாரிகளிடம்...
வாக்குமூலம் வழங்குவதற்காக பமேலா லிங் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில், அவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று அவரின் சகோதரர் சைமன் லிங் கூறினார்.

பமேலா மின்னழைப்பு காரொன்றின் மூலம் சென்றுள்ளார். இடைவழியில், அக்காரை அடையாளம் தெரியாத மூன்று வாகனங்கள் இடைமறித்து நிறுத்தியுள்ளனர். அதன்பின், அந்த வாகனங்களில் ஒன்றில் ஏறும்படி பமேலாவை அந்நபர்கள் வலியுறுத்தினர் என்று என்னுடைய குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது என்று சைமன் கூறினார்.

பிற்பகலில் நடைபெற்ற அச்சம்பவத்திற்குப் பின்னர் பமேலா என்ன ஆனார் என்பது எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. அவர்
காணாமல் போய் இருபது நாட்களுக்கு மேல் ஆகி விட்டன. தொலைபேசி மூலம் நாங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் மறுமொழி கிடைக்கவில்லை என்றார் சைமன் அவரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அஞ்சுகிறோம்.

அவரின் காணாமல் போன சூழல் அசாதாரணமான ஒன்றாக இருக்கிறது. இது குறித்து அவசியம் விசாரணை நடத்தப்பட வேண்டும். போலீசாரிடம் எங்களின் குடும்பத்தினர் புகார் செய்துவிட்டனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.பமேலா ஆகக் கடைசியாக கோலாலம்பூர், செராஸில் உள்ள சன்வே வெலோசிட்டி அடுக்ககத்தில் வசித்து வந்தார் என்றும் சைமன் தெரிவித்தார்.


Pamela Ling, 42, dilaporkan hilang selepas menuju ke pejabat SPRM di Putrajaya untuk memberi keterangan. Dikhuatiri diculik selepas kereta beliau disekat oleh tiga kenderaan yang tidak dikenali. Keluarga telah membuat laporan polis dan meminta siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *