கெந்திங்கில் 25 பயணிகளுடன் பேருந்து விபத்து!

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜூன் 22,
கெந்திங் மலை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட மூவர் காயமடைந்தனர். நேற்று இரவு 7.45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்து பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டதாக BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். விபத்துக்குள்ளான பேருந்து கெந்திங் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிய வந்துள்ளது.
பேருந்தில் மொத்தம் 25 பயணிகள் பயணித்த நிலையில் 74 வயதுடைய இரு மூதாட்டிகளும் 54 வயதுடைய பேருந்து ஓட்டுநரும் காயமடைந்திருப்பதாகவும் 23 பயணிகள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். மலை பகுதிகளில் வாகனங்களை மிகுந்த கவனத்துடன் செலுத்தும்படியும் இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகவும் BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
Sebuah bas pelancongan hilang kawalan di Genting Highlands dan terlibat dalam kemalangan, mencederakan tiga termasuk pemandu. Seramai 25 penumpang berada dalam bas, dan 23 daripadanya hanya mengalami kecederaan ringan. Tiada kematian dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *