6 வாகனங்கள் விபத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

top-news

ஜூன் 17,


ஜெம்போலிலிருந்து கெமாயான் செல்லும் சாலையில் 6 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் படுகாயம் அடைந்தனர். மாலை 5.15 மணிக்கு Jalan Bahau சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக Jempol மாவட்டக் காவல் ஆணையர் Norhisham Mustapar தெரிவித்தார். 

3 வாகனங்கள் 3 மோட்டார் சைக்கிள்கள் சம்மந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் 28 வயது Jayaseelan என அடையாளம் காணப்பட்டுள்ளது. 38 வயது Proton Waja வாகனமோட்டி மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதாகவும் Proton Waja வாகனத்திற்குப் பின்னால் வந்த 3 மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து Proton Waja வாகனத்தை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்த்தில் பாதிக்கப்பட்ட 29 முதல் 42 வயதுக்குற்பட்ட நால்வரும் Jempol மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக Jempol மாவட்டக் காவல் ஆணையர் Norhisham Mustapar தெரிவித்தார்.


Enam kenderaan termasuk tiga motosikal terlibat dalam kemalangan di Jalan Bahau, Jempol. Seorang lelaki berusia 28 tahun, Jayaseelan, maut di tempat kejadian, manakala empat lagi cedera. Kemalangan berlaku akibat cubaan memotong yang gagal oleh pemandu Proton Waja.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *