கால்வாயில் கவிழ்ந்த கார்! இளைஞர் படுகாயம்!

top-news

ஜுன் 23,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி படுகாயம் அடைந்தார். இன்று காலை 6.15 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 8 பேர் கொண்ட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தில் சிக்கியிருந்த ஆடவரை மீட்டதாகவும் சபா மாநில மீட்பு ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. படுகாயத்துடன் வாகனத்தில் சிக்கியிருந்த வாகனமோட்டி பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநேரத்தில் வாகனம் அதிவேகமாகப் பயணித்தால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனமோட்டி 27 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்காக Kampung Purun மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் Kuala Penyu மாவட்ட மீட்பு ஆணைய உதாவி இயக்குநர் Mohamad Irwan Hj Jaidin தெரிவித்தார். விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக Kuala Penyu மாவட்ட மீட்பு ஆணைய உதாவி இயக்குநர் Mohamad Irwan Hj Jaidin தெரிவித்தார்.


Seorang pemuda cedera parah selepas keretanya terbabas dan terbalik ke dalam longkang akibat hilang kawalan. Kejadian berlaku di Sabah pagi tadi dan mangsa berjaya diselamatkan pasukan bomba sebelum dihantar ke Hospital Kampung Purun untuk rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *