கனிமவளங்களைத் திருடிய கும்பல் கைது! RM1.25 மில்லியன் பொருள்கள் பறிமுதல்!

top-news

மே 2, 

பாதுகாக்கப்பட்ட அரசு வனப்பகுதியில் சட்டவிரோதமாகக் கனிமவளங்களைக் கொள்ளையடித்த கும்பலைக் கடத்தல் பிரிவு சிறப்புப் படையினர் கைது செய்தனர். குவாந்தானில் உள்ள Bukit Ibam வனப்பகுதியில் சட்டவிரோதச் செயல்களில் சிலர் ஈடுபடுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சிறப்புப் படையினர் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடத்திய சோதனையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர் என்றும் ஒருவர் சீனா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பலிடமிருந்து RM1.25 மில்லியன் மதிப்பிலான இயந்திரங்களும் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ரொம்பின் மாவட்டக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Batalion 7 PGA dan UPNP menumpaskan kegiatan lombong bijih besi haram di Muadzam Shah dalam Op Bersepadu Khazanah. Dua warga Bangladesh tanpa dokumen dan pemilik lombong ditahan. Peralatan lombong bernilai RM1.25 juta dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *