மகா சிவராத்திரி நாளில் அணியவேண்டிய ஆடைகள்,அணியக்கூடாத ஆடைகள்!

top-news
FREE WEBSITE AD

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மற்றும் தவிர்க்க வேண்டிய நிறங்கள் குறித்து பலரும் தெரியாமல் இருக்கலாம்.இந்த புனித நாளில் சிவன் கோபமடையும் நிறத்திலான ஆடையை அணிய கூடாது என கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காம் திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பிப்ரவரி 26 இன்று புதன்கிழமை இந்த திருவிழா நடக்கிறது. இந்த நாளில் கண்விழித்து இரவு முழுவதும் சிவனை நினைத்து விரதமிருக்க வேண்டும் என்பதே சிவராத்திரி விரதத்தின் சிறப்பு.

சிவபெருமானின் அருளைப் பெற, பச்சை நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானது என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். சிவன் இயற்கையை நேசிப்பவர், எனவே பச்சை நிறம் அவரது பிரியமான நிறம் என கருதப்படுகிறது.

பச்சை நிற ஆடை இல்லையென்றால்:
வெள்ளை (சுத்தத்தைக் குறிக்கும்)
சிவப்பு (ஆன்மீக சக்தியை குறிக்கும்)
மஞ்சள் அல்லது ஆரஞ்சு (ஆகார சக்தியை அதிகரிக்கும்)

மகா சிவராத்திரியில் எந்த நிற ஆடை அணியக்கூடாது?

• கருப்பு நிற ஆடையை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள்.

• சிவபெருமான் கோபப்படக்கூடிய நிறம் கருப்பு என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

• கருப்பு நிறம் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த நாளில் அணிய வேண்டாம்.

கோவிலுக்குச் செல்லும் முன், கருப்பு நிற ஆடைகளை மாற்றி, சிவபெருமானுக்கு உகந்த நிற ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் அருளைப் பெறபச்சை, வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற ஆடைகளை  அணியலாம். கருப்பு நிற ஆடையை தவிர்க்க வேண்டும், இது சங்கடத்தை வரவழைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சிவராத்திரியில் சிவனை வணங்கி, அவரது அருளைப் பெறுங்கள்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *