மகாலக்ஷ்மி கடாட்சம் பெருக வீட்டில் பூத்துக் குலுங்க வேண்டிய மலர்கள்!

top-news
FREE WEBSITE AD

தெய்வீக அம்சம் கொண்ட மலர்கள் நம் வீட்டில் பூத்துக் குலுங்குவதால், மகாலக்ஷ்மி கடாட்சம் பெருகும். வீட்டில் தெய்வீகத்தன்மை இருக்கும்.வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழலாம். அத்தகைய மலர்கள் என்னென்ன என்ற தகவல் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. பவளமல்லி: அதிக நறுமணம் கொண்ட இந்த மலரை பூஜையறையில் வைத்தோம் என்றால், தெய்வத்தையே வசியப்படுத்தும் வல்லமையைப் பெற்றது. இரவு மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் பவளமல்லி பூ இரவு முழுவதும் நல்ல மனத்தைப் பரப்புகிறது. பவளமல்லி பூவிற்கு தொற்றுநோயை குணமாக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண் திருஷ்டி மற்றும் பொறாமை பார்வைகளை சரிசெய்யும்.

2. பாரிஜாத மலர்: 'தேவலோகத்து மலர்' என்று அழைக்கப்படும் பாரிஜாத மலர் திருமாலுக்கு மிகவும் பிடித்தமான பூவாகவும், அம்சமாகவும் கருதப்படுகிறது. இதை வீட்டில் வைப்பதால், குறையாத செல்வ செழிப்பு ஏற்படும். பாரிஜாத மலர் கண் சம்பந்தமான பிரச்னைகளையும் குணமாக்குவதாக சொல்லப்படுகிறது.

3. மனோரஞ்சிதம் மலர்: தொழில் செய்யும் இடத்தில் இந்த மலரை வைப்பதன் மூலம் தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். கடன் பிரச்னைகள் தீரும். கண்ணுக்கு தெரியாத எதிரிகளையும் அழிக்கும். இந்த மலரை வீட்டில் வைத்தால், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

4. செண்பகம் மலர்: சுக்கிரனின் அம்சமான செண்பக மலரை வீட்டில் வைத்தால், சுகமான வாழ்க்கை அமையுமாம். அதிர்ஷ்டம் இருந்தால்தான் இந்தச் செடி ஒருவர் வீட்டில் வளரும் என்று சொல்லப்படுகிறது. இந்த மலரை வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மிக்கு வைத்து வழிபட்டால், மகாலக்ஷ்மியின் பூரண ஆசியும், அருளும் கிடைக்கப்பெற்று செல்வம் குறையாது கிடைக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

5. பிரம்மகமலம் மலர்: பிரம்மாவின் அம்சமாகவும், மறு உருவமாகவும் கருதப்படும் பிரம்மகமலம் பூவில்தான் பிரம்மா தவம் செய்துக்கொண்டிருப்பார் என்றும் இந்த மலரைக் கொண்டு வழிபட்டால், அனைத்து வரங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த செடியிலே மலர் பூக்கும்போதே வேண்டிக்கொண்டால் அந்த வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

6. கிருஷ்ணகமலம் மலர்: கிருஷ்ண கமலத்தை வளர்ப்பதையே பாக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த செடியை வளர்ப்பதின் மூலம் கிருஷ்ணரையே வளர்ப்பதுக்கு சமமாக சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டம் நிறைந்த கிருஷ்ண கமலம் பூ கிருஷ்ணரின் அம்சமாகக் கருதப்படுகிறது. இந்த மலரை வளர்ப்பதின் மூலம் செல்வம் அதிகரிக்கும். துர்சக்திகள் வீட்டில் வராமல் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *