RM 13 லட்சம் மதிப்புள்ள கடத்தல் போன்சாய் மரங்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

 கோத்தா பாரு, மே 2: செவ்வாயன்று இங்குள்ள KTJ Pos JP1 Pak Teh Kana பகுதியில் Op Taring Wawasan Kelantan என அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையின் போது, ​​2,000 க்கும் மேற்பட்ட போன்சாய் மரங்களை ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தியதன் மூலம், அண்டை நாட்டிலிருந்து அலங்காரச் செடிகளைக் கடத்தும் முயற்சியை பொது செயல்பாட்டுப் படையான GOF பிரிவின் தென்கிழக்கு படைப்பிரிவு வெற்றிகரமாக முறியடித்தது.

அருகிலுள்ள எல்லைப் பகுதியில் வழக்கமான மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் விளைவாக, GOF 18வது பட்டாலியனின் உறுப்பினர்கள் இரவு 7.20 மணிக்கு அவற்றைக் கைப்பற்றியதாக அதன் தலைவர் நிக் ரோஸ் அஜான் நிக் அப் ஹமீத் தெரிவித்தார்.

லாரியை ஆய்வு செய்தபோது, ​​தாய்லாந்தில் இருந்து செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,780 போன்சாய் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மரங்கள் உள்ளூர் வகை தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும்,  பூச்சிகள் மற்றும் நோய்களைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனை அடுத்து, 29 வயதான லாரி ஓட்டுநரான உள்ளூர்வாசி, மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாகனம் உட்பட பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு 13 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் உயிரியல் பாதுகாப்பை, குறிப்பாக விவசாயம் மற்றும் தோட்டத் துறைகளில், ஆபத்தை விளைவிக்கும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க, நாட்டின் எல்லைகளில் GOF அதன் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தும் என்று நிக் ரோஸ் அஜான் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய, கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்!

Pada hari Selasa, pasukan GOF berjaya menggagalkan cubaan penyeludupan 2,780 pokok bonsai yang dibawa tanpa dokumen sah dari Thailand, bernilai RM131,000. Pemandu lori tempatan ditahan untuk siasatan lanjut.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *