என்னை வற்புறுத்த வேண்டாம்! அமைச்சரவைக்குத் திரும்பமாட்டேன்! Nik Nazmi உறுதி!

- Sangeetha K Loganathan
- 17 Jun, 2025
ஜூன் 17,
பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தேர்தலில் அடைந்த தோல்வி அடுத்து தனது இயற்கை வளங்கள் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியைத் துறந்த Nik Nazmi Nik Ahmad யார் சொன்னாலும் நான் விலகியது விலகியது தான் என்றும் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பும்படி வற்புறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக அமைச்சரவையிலிருந்து விலகிய Nik Nazmi Nik Ahmad மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்ப வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார்.
ஆனால் என்னுடைய அமைச்சர் பதவி விலகல் என்பது மிகுந்த சிந்தனைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவு, யாருடைய கட்டாயத்தின் பேரிலும் தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை என்றும் இன்று Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார். அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஆனால் ஒருபோதும் கட்சியிலிருந்து தாம் எந்த சூழ்நிலையிலும் விலகமாட்டேன் என்றும் இந்த முடிவில் தாம் உறுதியாக இருப்பதாகவும் Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார்.
Nik Nazmi Nik Ahmad menegaskan tidak akan kembali menyertai Kabinet selepas meletak jawatan sebagai Menteri Sumber Asli dan Alam Sekitar. Walaupun PM Anwar memujuk, beliau kekal dengan keputusannya, namun menegaskan akan terus setia bersama PKR.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *