மறைந்தார் போப் பிரான்சிஸ்!

- Muthu Kumar
- 21 Apr, 2025
உலகத்தின் 1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போப்பாக பதவியேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸ் எந்த விதமான சம்பளமும் பெறவில்லை. பாரம்பரியப்படி ஒரு போப்புக்கு மாதம் சுமார் $32,000 சம்பளம் வழங்கப்படும்.ஆனால் போப் பிரான்சிஸ் அந்த சம்பளத்தையும் தன்னை சார்ந்த தேவைகளுக்குப் பயன்படுத்தாமல், அதனை தேவாலயம் அல்லது நன்கொடைகளுக்கு மாற்றியமைத்தார்.
போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு சுமார் $16 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது. இவரிடம் பணிப் பதவியுடன் தொடர்புடைய 5 கார்கள் மற்றும் சில முக்கியமான வசதிகள் இருந்துள்ளன.போப்பாக இருந்த காலப்பகுதியில் அவர் உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். மக்களுக்கான உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசியவர் போப் பிரான்சிஸ், தனது சேவையுடன் உலகின் மரியாதை பெற்ற ஆன்மிகத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *