உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு- மலேசியாவுக்கு 88ஆவது இடம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 3-

2025ஆம் ஆண்டின் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் மலேசியா 19 இடங்களுக்கு முன்னேறி 88ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று “ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (ஆர்எஸ்எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் மலேசியாவுக்கு 56.09 புள்ளிகள் கிடைத்துள்ளன.

கடந்தாண்டில் அதற்குக் கிடைக்கப் பெற்ற புள்ளிகள் 52.07 ஆகும். அவ்வேளையில், மலேசியா 34 இடங்களுக்கு வீழ்ச்சி கண்டு 107 ஆவது இடத்தில் பின்தங்கியது. கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியா 73ஆவது இடத்தைப் பிடித்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்கு 88ஆவது இடம் கிடைத்திருப்பது ஒரு பின்னடைவாகும்.

மலேசியா பத்தொன்பது இடங்களுக்கு முன்னேறினாலும், அது இன்னும் "பிரச்சினைக்குரிய சூழ்நிலையில்தான் உள்ளது என்றும் தனது அறிக்கையில் ஆர்எஸ்எஃப் கூறியுள்ளது.

ஆசியான் வட்டாரத்தைப் பொறுத்தமட்டில், அண்டை நாடான தாய்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மலேசியா உள்ளது. தாய்லாந்துக்கு கிடைத்துள்ள இடம் 85ஆகும். ஆனால், புரூணை (97ஆவது இடம்), பிலிப்பைன்ஸ் (116ஆவது இடம்), சிங்கப்பூர் (123ஆவது இடம்), இந்தோனேசியா (127ஆவது இடம்), லாவோஸ் (150ஆவது இடம்), கம்போடியா (161ஆவது இடம்), மியன்மார் (169ஆவது இடம்), வியட்நாம் (173ஆவது இடம்) ஆகிய நாடுகளைவிட மலேசியா முன்னணியில் உள்ளது.

பொருளாதாரம், சமூகம், பாதுகாப்பு ஆகிய குறியீடுகளில் மலேசியா முறையே 60ஆவது. 81ஆவது மற்றும் 90ஆவது இடத்தில் உள்ளது. இது திருப்தியளிக்கக்கூடிய செயல்பாடாகும் என்றும் ஆர்எஸ்எஃப் குறிப்பிட்டுள்ளது.

Malaysia meningkat 19 tempat ke kedudukan ke-88 dalam Indeks Kebebasan Media 2025 menurut Reporters Without Borders (RSF), dengan 56.09 mata. Walaupun peningkatan, Malaysia masih dianggap berada dalam situasi "bermasalah" dalam kebebasan media.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *