கொசோவோ நாட்டுத் தூதரகம் மலேசியாவில் திறக்கப்பட்டது!

- Muthu Kumar
- 03 May, 2025
புத்ராஜெயா, மே 3-
கொசோவோ நாட்டுத் தூதரகம் கோலாலம்பூரில் நேற்று திறக்கப்பட்டது. அதற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு தமது பாராட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நான்கு நாள் அரசுமுறை வருகையை மேற்கொண்டு மலேசியா வந்துள்ள கொசோவோ அதிபர் வோசா ஒஸ்மானி சாட்ரியூவுடன் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்வார், மலேசியா- கொசோவோ இடையிலான இருவழி உறவுகளை வலுப்படுத்தும் ஒரு வரலாற்றுத் தருணமாக தூதரக திறப்புவிழா அமைந்துள்ளது என்று புகழ்ந்துரைத்தார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி, பண்பாடு, சுற்றுலா போன்றவற்றுக்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார். நேற்றுமுன்தினம் மலேசியா வந்தடைந்த ஒஸ்மானிக்கு பெர்டானா புத்ராவில் நேற்று அதிகாரப்பூர்வ வரவேற்புச் சடங்கு நல்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சுதந்திர நாடானது. அதற்கு விரைந்து அங்கீகாரமளித்த ஆசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அந்நாட்டுடன் மலேசியா அதிகாரப்பூர்வமான முறையில் அரச தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.
Duta besar Kosovo dibuka di Kuala Lumpur, mendapat pujian daripada Perdana Menteri Anwar Ibrahim. Pembukaan kedutaan ini dianggap sebagai langkah penting untuk memperkukuh hubungan dua hala Malaysia-Kosovo dalam perdagangan, pendidikan, budaya, dan pelancongan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *