105 வெளிநாட்டுச் சட்டவிரோதத் தோட்டத் தொழிலாளர்கள் கைது!

top-news

பிப்ரவரி 18,

நேற்று அதிகாலை தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் மேற்கொண்ட சோதனையில் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATUK MOHD RUSDI DARUS தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தோட்டத்தில் பலகையிலான வீடுகள் அமைக்கப்பட்டு சுமார் 329 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 105 பேர் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார். 

அதிகாலை 1 மணிக்குச் சோதனையைத் தொடங்கியதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள் என்றும் 7 பெண்கள் என்றும் அனைவரும் 18 முதல் 54 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் BANGLADESH, INDONESIA, MYANMAR, PAKISTAN, INDIA நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் DATUK MOHD RUSDI DARUS தெரிவித்தார். BATU PAHAT பகுதியில் இயங்கி வரும் சம்மந்தப்பட்ட தோட்டத்தின் மேலாளரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Jabatan Imigresen Johor menahan 105 pekerja ladang asing tanpa dokumen sah dalam serbuan di Batu Pahat. Seramai 329 pekerja tinggal di ladang itu dan 105 daripadanya didapati menetap secara haram. Siasatan ke atas pengurus ladang masih dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *