PARKING பிரச்சனை! கைகலப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 02 May, 2025
மே 2,
வாகனம் நிறுத்துமிடத்தில் இருவர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை Taman Bukit Indah வணிகத் தலத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகலப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் 21 வயது உள்ளூர் இளைஞர் என்றும் மற்றொருவர் 49 வயது சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை நிறுத்துவதற்காகக் காத்திருந்த இளைஞரை முந்திக்கொண்டு சிங்கப்பூர் ஆடவர் வாகனத்தை நிறுத்தியதால் கோபமடைந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
Pertelingkahan berkaitan tempat letak kereta di Taman Bukit Indah bertukar menjadi pergelutan fizikal antara seorang remaja tempatan berusia 21 tahun dan lelaki Singapura berusia 49 tahun. Kedua-duanya ditahan dan siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *