முதலீட்டு மோசடியில் RM136,110 இழந்த இல்லத்தரசி!

- Sangeetha K Loganathan
- 02 May, 2025
மே 2,
அதிக லாபம் பெறும் நோக்கத்தில் இயங்கலை நிறுவனத்தில் முதலீடு செய்ததாக 39 வயது இல்லத்தரசி தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சோலார் விளக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கடந்த திங்கட்கிழமை அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பிதழைப் பெற்றதாகவும் அதிக லாபம் பெறும் நோக்கத்தில் 39 வயது இல்லத்தரசி தனது சேமிப்புப் பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாள்களில் நல்ல லாபம் பெற்றாலும் பணத்தைத் திரும்பப் பெற மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தப்பட்டதும் நேற்று மாலை தெமர்லோ மாவட்டக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். கடந்த 2 நாள்களில் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 13 பரிவர்த்தனைகளை மேற்கொண்டதில் மொத்தம் RM136,110 ரங்கிட பணத்தை அவர் இழந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவதுறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
Seorang suri rumah berusia 39 tahun kerugian RM136,110 selepas diperdaya melabur dalam syarikat kononnya menghasilkan lampu solar. Mangsa dipujuk untuk membuat bayaran tambahan bagi mengeluarkan keuntungan sebelum menyedari dirinya ditipu lalu membuat laporan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *