ரஷ்யா - ரோமானியா இடையே போர் வெடிக்கிறதா?

top-news
FREE WEBSITE AD

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் நேட்டோ நாடான ரோமானியா மற்றும் ரஷ்யா இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.ரோமானியா வான் எல்லைக்குள் ரஷ்யா ட்ரோன்கள் சென்று வருவதால் ரோமானியா எஃப் 16 ரக போர் விமானங்களை களமிறக்கி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கி 3வது ஆண்டு முடிய போகிறது. இன்னும் முடிவு என்பது வரவில்லை. உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்பட பல நாடுகள் உதவி வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா போரை விடாமல் தொடர்ந்து வருகிறது.

இப்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி உள்ளார். இவர் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல் போர் நிறுத்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் தயாராக உள்ளனர்.

இதனால் விரைவில் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது ரஷ்யாவுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பெயர் ரோமானியா. ரஷ்யாவும், ரோமானியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் ரஷ்யா - ரோமானியா இடையே மோதல் என்பது தொடர்ந்து வருகிறது.

இதில் ரோமானியா என்பது நேட்டோ அமைப்பில் உள்ளது. இதுவும் ரஷ்யா - ரோமானியா இடையேயான மோதலுக்கான காரணங்களில் ஒன்றாகும். ஏனென்றால் ரஷ்யாவுக்கு, நேட்டோ என்றாலே பிடிக்காத நிலை உள்ளது. உக்ரைனும், நேட்டோவில் சேர முயன்றதால் தான் அந்த நாட்டு மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இப்போதும் ரஷ்யா, உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் தானுபே ஆற்றின் கரையோர பகுதிகளில் ஏற்கனவே ரஷ்யா தாக்குதல் நடத்தி விட்டது. உக்ரைனும், ரோமானியாவும் அண்டை நாடுகள். 381 மைல் தொலைவுக்கு இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ரஷ்யா தாக்குதல் நடத்திய தானுபே ஆற்றின் அருகே தான் உக்ரைன் - ரோமானியா நாடுகளின் எல்லை அமைந்துள்ளது. இப்போது மீண்டும் இந்த தானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மெயில் பகுதியில் தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதலின்போது ரஷ்யாவின் ட்ரோன்கள் ரோமானியா வான் எல்லைக்குள் அவ்வப்போது நுழைந்து வருகின்றன. இதனால் ரோமானியா கடும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து ரஷ்யா ட்ரோன் பறக்கும் எல்லைப்பகுதியில் ரோமானியா அரசு சார்பில் எஃப் 16 ரக போர் விமானங்கள் 2 பறக்கவிடப்பட்டு வருகின்றன. மேலும் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் பறக்கவிடப்பட்டு இருப்பதை ரோமானியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த அமைச்சகம் சார்பில், ''போருசியாவில் உள்ள 86வது விமானப்படை தளத்தில் இருந்து 2 எஃப் 16 ரக போர் விமானங்கள் எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் உள்ளூர் நேரப்படி காலை 3.40 மணி முதல் காலை 5 மணி வரை வானில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் ரஷ்யா- ரோமானியா இடையே பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. அதோடு ரோமானியா நாட்டு எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ரஷ்யாவின் ட்ரோன்கள் பறப்பது தொடர்பாக அந்தநாட்டு பாதுகாப்புத்துறை சார்பில் எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யா - ரோமானியா உறவு என்பது எப்போதும் உறுதியாகவும், சுமூகமாக இருந்தது இல்லை. ஏற்ற, இறக்கத்துடனே இருந்துள்ளார். ஆனாலும் ரோமானியா நாட்டு தூதரகம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிலும், துணை தூதரகம் அந்த நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலும் உள்ளது. அதேபோல் ரஷ்யாவின் தூதரகம் ரோமானியாவின் புக்கரெஸ்ட்டிலும், துணை தூதரகம் கான்ஸ்டன்டாவிலும் உள்ளனர். இருப்பினும் இருநாடுகள் இடையே சுமூக உறவு மட்டும் இருந்ததே இல்லை. குறிப்பாக 1990க்கு பிறகு சோவியத் யூனியன் பல பாகங்களாக உடைந்து ரஷ்யாவாக மாறிய பிறகு ரோமானியா உடனான மோதல் என்பது வலுத்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *