கட்சித் தாவும் அரசியல்வாதிகளுக்கு அம்னோ எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜூன் 22,
ஒரு கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளை அம்னோ நம்பாது என அம்னோ உதவித் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Mohamed Khalid Nordin இன்று தெரிவித்தார். முக்கியமாக ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளிலிருந்து வெளியேறுபவர்கள் அதே ஒற்றுமை கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளில் இணைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சம்மந்தப்பட்ட கட்சிகளும் அவர்களை அனுமதிக்க கூடாது என Datuk Seri Mohamed Khalid Nordin வலியுறுத்தினார்.
சொந்த கட்சியிலிருந்து வெளியேறி ஆட்சியிலிருக்கும் மற்ற கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் நோக்கம் ஒன்று தான். அது பதவிக்காக மட்டும் தான் என்றும் இப்படியான சுயநலவாதிகளை மற்ற கட்சிகள் அங்கீகரிக்காமல் இருந்தாலே அரசியல் கருத்து முரண்கள் ஏற்படாது என்றும் Datuk Seri Mohamed Khalid Nordin நினைவூட்டினார். அதே வேளையில் ஒரு சில நபர்களால் ஒட்டு மொத்த கட்சியையும் நாம் தவறாக எடுத்த கொள்ள முடியாது என்றும் அம்னோவிலிருந்து இப்படி வெளியேறி மற்ற கட்சியில் இணைபவர்கள் மீது அம்னோ கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை Datuk Seri Mohamed Khalid Nordin எச்சரித்தார்.
Datuk Seri Mohamed Khalid Nordin menegaskan UMNO tidak mempercayai ahli politik yang melompat parti, khususnya dalam gabungan yang sama. Beliau menyifatkan tindakan tersebut didorong oleh kepentingan jawatan dan UMNO akan ambil tindakan tegas terhadap mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *