யுனெஸ்கோ விருதுக்கு தேர்வான குரு பகவானின் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்!

top-news
FREE WEBSITE AD

குரு பகவானின் ஸ்தலங்களில் ஒன்றான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகியுள்ளது.இந்த கோயிலில் ஒவ்வொரு முறையும் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆலங்குடியில் உள்ளது குருபகவான் கோயில் அல்லது ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இந்த கோயில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என தெரியவில்லை.

ஆனால் ரூ 5 கோடி மதிப்பில் கோயிலின் தொன்மை மாறாமல் இருக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் எனப்படும் யுனெஸ்கோ இந்த கோயிலில் திருப்பணிகள் நடத்தி புதுப்பித்தமைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள துக்காச்சியில்தான் இந்த கோயில் இருக்கிறது. இங்கு ராஜராஜசோழனின் 7ஆம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. நவக்கிரக கோயில்களை பார்வையிடும் மக்கள் இந்த கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *