2025 ஆம் ஆண்டில் நவகிரகங்களில் இளவரசன் புதன் பகவான்!

top-news
FREE WEBSITE AD

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலம் எடுத்துக் கொண்டாலும் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புதன் பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசி ஆகும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதல் வாரத்திலேயே புதன் பகவான் தனுசு ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை தொடங்கும் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

இந்த காலகட்டத்தில் தொடங்கும். செயல்கள் அனைத்தும் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். மாணவர்கள் கல்விகள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *