முதியோருக்கு இலவச INFLUENZA தடுப்பூசி!

top-news

பிப்ரவரி 18,

60 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாக INFLUENZA தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மலாக்கா மாநிலச் சுகாதார மனிதவள மேம்பாடுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Ngwe Hee Sem இன்று தெரிவித்தார். முதற்கட்டமாக 2000 INFLUENZA தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதியவர்களுக்கு இந்த இலவச INFLUENZA தடுப்பூசிகள் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், அதிக கொழுப்பு, சிறுநீரக நோய் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு முதற்கட்டமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று முதல் அதிகாரப்பூர்வமாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் அருகில் உள்ள சுகாதாரக் கிளினிக்குகளில் இது தொடர்பான மேலதிக விண்ணப்பங்களை மேற்கொள்ளவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படுவதைச் சுகாதார அதிகாரிகள் உறுதிச் செய்வதாகவும் அவர் நம்பிக்கை அளித்தார்.

Kerajaan Negeri Melaka akan memberikan 2,000 suntikan vaksin influenza secara percuma kepada warga emas berusia 60 tahun ke atas terutama mereka yang mempunyai penyakit kronik seperti diabetes, tekanan darah tinggi dan sakit jantung. Program ini bermula hari ini dan akan dijalankan melalui klinik kesihatan terpilih.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *