RM 23,000 மதிப்பிலானக் கடத்தல் மின்சிகரெட்டுகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
சட்டவிரோதமாக மின்சிகரெட்டுகளை விற்பனை செய்த வளாகத்திலிருந்து RM 23,000 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கடத்தல் பிரிவின் சிறப்புப் படை PGA தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் 3 மணிக்குத் தும்பட்டில் உள்ள ஒரு வணிகக் கடையில் சட்டவிரோதமாக மின்சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட கடையில் சோதனையை மேற்கொண்டதாகவும் 26 வயது கடையின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வணிகக் கடை தும்பாட் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமானது என்றாலும் முறையான உரிமம் இல்லாமல் அக்கடை செயல்பட்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட கடையிலிருந்து 198 மின்சிகரெட்டுகளின் திரவங்கள், 59 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட வணிகக் கடையை முடியதாகவும் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளின் மதிப்பு RM 23,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
PGA merampas produk vape bernilai RM23,000 dari sebuah premis di Tumpat yang menjual secara haram. Seorang lelaki berusia 26 tahun ditahan. Premis tersebut beroperasi tanpa lesen sah dan disyaki menjual rokok elektronik tanpa kebenaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *