பராமரிப்பாளர் குளிப்பாட்டும் போது தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை மரணம்!

top-news
FREE WEBSITE AD

(நமது நிருபர்)

சுங்கை பூலோ, ஜூன் 16-

புஞ்சாக் ஆலாமில் பராமரிப்பாளர் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை ஒன்று மரணமுற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.42 மணிக்கு புஞ்சாக் ஆலாம் யூஐடிஎம் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து சௌஜானா உத்தாமா போலீஸ் நிலையம் பெற்றதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

புகாரின்படி அம்மருத்துவர் மருத்துவமனை அவசரப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இரவு 7.23 மணிக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று சுய நினைவின்றி பெறப்பட்டது.அக்குழந்தை புஞ்சாக் ஆலாமிலுள்ள ஒரு கிளினிக்கிலிருந்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வரப்பட்டது.

இதில் புகார் செய்தவரும் அவசர் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவரும் 22 நிமிடங்களுக்கு அக்குழந்தைக்குச் சுவாச உதவி மற்றும் மருந்துகளையும் கொடுத்தனர். எனினும், அக்குழந்தை சுவாசிப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.அதே சமயம் மாலை 5.40 மணிக்குக் குழந்தையின் தாயாரிடமிருந்து வந்த புகாரின்படி குழந்தை தவறி விழுந்து சுய நினைவில் இருக்கிறது என்று பராமரிப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறினார்.

பராமரிப்பாளர் கூறியபடி அக்குழந்தை வலதுபுற பக்கவாட்டில் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.குழந்தையை புஞ்சாக் ஆலாமிலுள்ள ஒரு கிளினிக்கிற்குப் பராமரிப்பாளர் கொண்டு சென்றார். குழந்தையின் சடலம் புஞ்சாக் ஆலாம் யூஐடிஎம் மருத்துவமனையில் சவப் பரிசோதனை செய்யப்பட்டது. சவப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் வரை இது திடீர் மரணச் சம்பவமாக வகைப்படுத்தப்படுகிறது.

பராமரிப்பாளரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதால் இதுபற்றி எந்த ஆரூடமும் கூறாமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ஓர் அறிக்கையில் எஸ்பி முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் குறிப்பிட்டார்.

Seorang bayi perempuan 10 bulan maut selepas terjatuh ketika dimandikan oleh penjaga di Puncak Alam. Bayi dihantar ke hospital namun gagal diselamatkan. Kes diklasifikasikan sebagai mati mengejut sementara menunggu laporan bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *