SST விவகாரம்! அன்வார் கவனக்கவில்லை! – அக்மால் சலே வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜூன் 16,
SST எனும் பொருள் வணிகச் சேவைக்கான வரி ஜுலை 1 முதல் விரிவாக்கம் செய்யப்படுவதை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான Datuk Dr Akmal Saleh எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உண்மையில் அன்வார் SST வரியின் விரிவாக்கத்தை முழுமையாகக் கவனிக்க தவறிவிட்டார் என்றும் முக்கிய அடிப்படை பொருள்களின் விலை SST வரியால் அதிகரிக்கும் என்றும் Datuk Dr Akmal Saleh நினைவூட்டினார். மேலும் GST வேண்டாம் என அன்வார் தெரிவித்திருப்பது GST குறித்து அன்வாருக்கு யாரும் விளக்கவில்லை என்றும் GST மூலப் பொருள்களுக்கு வரி விதிப்பதில்லை. ஆனால் SST என்பது ஒரு பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளுக்கு வரி விதிக்கப்படுகிறது என Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.
புதிய SST வரி கொள்கையால் குழந்தைகளுக்கான பிஸ்கெட்டுகளும் சமையலுக்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படிம் தேங்காய் பாலின் விலையும் அதிகரிக்கும் என Datuk Dr Akmal Saleh எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக ஜூலை 1 முதல் வாடகை அல்லது குத்தகை, கட்டுமானப் பணிகள், தனியார் சுகாதாரம், கல்வி, அழகு சாதனங்கள் உள்ளடக்கிய 6 முக்கிய சேவைகளுக்கு புதிய SST வரி கொள்கை அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Ketua Pemuda UMNO, Datuk Dr Akmal Saleh, mengkritik Anwar kerana gagal meneliti implikasi SST yang diperluas mulai 1 Julai. Beliau mendakwa SST membebankan rakyat dengan kenaikan harga barangan asas berbeza dengan GST yang tidak cukai bahan mentah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *