கண்புரை அறுவைசிகிச்சைக்குச் சென்ற சிறுமிக்கு நிரந்தர பார்வையிழப்பு!

- Shan Siva
- 31 Dec, 2024
கோலாலம்பூர், டிச 31: தனது கண்புரை தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட 10 வயது சிறுமிக்கு, தவறான சிகிச்சையளிக்கப்பட்டதால் நிரந்தரமாக பார்வையை இழந்தார்.
தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
போது முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும், சிறந்த கவனிப்பைத் தேடி, ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததால்
இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில்
உள்ள தஞ்சோங் கராங்கில் வசிக்கும் அச்சிறுமியின் தாயாரான வோங், கடந்த 2022 இல் ஆலோசனைக்காக கோலாலம்பூருக்குச் சென்றார்.
புரையின் காரணமாக
கண்கள் கடுமையான நிலையில் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர், சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக
எச்சரித்தார்.
இதனை அடுத்து அந்த மாது அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு தன் மகளின் வலது கண்ணில் இரத்தம்
வர ஆரம்பித்தது என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவர் கண்களுக்கான
சொட்டு மருந்துகளை மட்டுமே பரிந்துரைத்தார் மற்றும் தனது மகளின் பார்வை
படிப்படியாக திரும்பும் என்று உறுதியளித்தார் என்று அவர் கூறினார்.
இருப்பினும்,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் பார்வையற்றவராக
தன் மகள் மாறினார் என்று அவர் தெரிவித்தார்
வெற்றிக்கான
சாத்தியக்கூறுகள், அதில் உள்ள
அபாயங்கள் அல்லது ஏதேனும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி மருத்துவர் தங்களிடம்
தெரிவித்திருந்தால், இன்னும்
எச்சரிக்கையான முடிவை எடுத்திருக்கலாம் என்று அவர் வேதனையுடன்
தெரிவித்தார்.
தனது மகளின்
உணர்ச்சி மற்றும் உளவியல் போராட்டங்கள் அவளை மிகவும் கவலையடையச் செய்யும் அதே
வேளையில், நிலைமை குறித்து
உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் வோங்
வெளிப்படுத்தினார்.
“இனி நான் வலுவாக இருக்க வேண்டும் மற்றும் என்
மகளின் கண்களாக மாற வேண்டும், மேலும் அவளுக்கு
மிகப்பெரிய ஆதரவாக இருக்க வேண்டும்” என்று அவர் உணர்ச்சி ததும்ப குறிப்பிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *