மெக்ஸ் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலாப் பேருந்து! 90 % எரிந்து நாசம்!

- Shan Siva
- 16 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 16: இன்று காலை கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் பாதையில், மெக்ஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலாப் பேருந்து எரிந்து நாசமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.14 மணியளவில் நெடுஞ்சாலையின் 20.2 கி.மீ. தொலைவில் ஒரு ஓய்வு பகுதிக்கு அருகில் இந்த சம்பவம்
நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத்
முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ஏழு தீயணைப்பு
வீரர்கள் மற்றும் ஸ்ரீ கெம்பங்கன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த
ஒரு தீயணைப்பு இயந்திரம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
தீயணைப்புப்
படையினர் காலை 8.25 மணிக்கு வந்து
சிறிது நேரத்திலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிஆர்ஆர் 9522 என்ற பதிவு எண்ணைக் கொண்ட சம்பந்தப்பட்ட
பேருந்து தீ விபத்தில் 90 சதவீதம் எரிந்து
நாசமானது என்று முக்லிஸ் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *