இந்தியர்களை இழிவுப்படுதிய சோள வணிகர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Feb, 2025
பிப்ரவரி 18,
சாலையோரக் கடையில் இந்தியர்களை இழிவுப்படுத்தும் வகையிலானச் சொல்லாடல்களைப் பயன்படுத்திய வணிகரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளதாகச் செப்பாங் மாவட்டக் காவல்துறை துணை ஆணையர் G K Shan Gopal இன்று தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட கடை கோத்தா வாரிசான் சாலையோரத்தில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட 60 வயது சோள் வியாபாரி உள்ளூர் ஆடவர் என்றும் அவரின் மனைவியான 50 வயது நபர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியர்களை இழிவானச் சொல்லாடல்களால் புன்படுத்தியதாகப் பலரும் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 50 வயது இந்தோனேசிய பெண் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருநப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது வரையில் 7 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சி அளிக்க பொதுமக்கள் முன்வரும்படியும் அவர் தெரிவித்தார்.
Sepasang suami isteri yang menjalankan perniagaan jagung di tepi jalan telah ditahan oleh pihak polis Sepang selepas didapati menggunakan kata-kata menghina terhadap masyarakat India. Kedai mereka juga beroperasi tanpa lesen, dan siasatan mendapati isteri peniaga tersebut, warga Indonesia berusia 50 tahun, tinggal secara tidak sah di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *