மூன்றாவது மடியிலிருந்து கவிழ்ந்த வாகனம்! – இளைஞர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜூன் 16,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம், 3 மாடியிலிருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 23 வயதான வெளிநாட்டுத் தொழிலாளர் படுகாயம் அடைந்தார். நேற்று மாலை 5.38 மணிக்குக் கோலாலம்பூரில் உள்ள Jalan Klang Lama குடியிருப்புப் பகுதியில் இவ்விபத்து நிகழந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட 23 வயது ஆடவர் Afghanistan நாட்டைச் சேர்ந்த தொழிலாளர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் படுகாயம் அடைந்த அவர் PPUM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார்.
Jalan Klang Lama குடியிருப்புப் பகுதியின் மூன்றாவது மாடியில் இயங்கி வந்த வாகனம் கழுவும் பட்டறையில் வாகனத்தைக் கழுவுவதற்காக Afghanistan தொழிலாளர் வாகனத்தை எடுத்ததாகவும் தவறுதலாக வாகனத்தைச் செலுத்தியதில் மூன்றாவது மாடியிலிருந்து வாகனம் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நொறுங்கிய Toyota Camry வாகனம் மோதியதில் தரையிலிருந்த Proton Iriz , Perodua Myvi ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Seorang pekerja warga Afghanistan berusia 23 tahun cedera selepas kereta yang dipandunya terjatuh dari tingkat tiga tempat cuci kereta di Jalan Klang Lama, Kuala Lumpur. Insiden berlaku akibat kesilapan mengendalikan kenderaan. Beberapa kereta lain turut rosak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *