IJN புதிய சாதனை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜூன் 5: உலகின் முதல் இரட்டை அறை லீட்லெஸ் பேஸ்மேக்கர் அமைப்பான அபோட் AVEIR™ DR-ஐ நோயாளிகளுக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளதாக தேசிய இருதய நிறுவனமான IJN இன்று அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் இந்த நடைமுறையை மேற்கொண்ட முதல் மருத்துவமனை IJN என்பதால், இது ஒரு வரலாற்று சாதனை என்று மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் அஸ்லான் ஹுசின் கூறினார்.

இந்த பெரிய சாதனை இதய சிகிச்சையில் புதிய தரநிலைகளை அமைப்பதில் IJN-ன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த புதுமையான இரட்டை-அறை லீட்லெஸ் இதயமுடுக்கி நமது தற்போதைய நோயாளிகளுக்கான பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும், மேலும் குழந்தைகள் அனைத்து தரப்பினருக்கும் பயனாக அமையும் என்று அவர் கூறினார்.

மே 27 அன்று முதல் செயல்முறை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 18 நோயாளிகள் புதிய சாதனத்தைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

IJN mencipta sejarah sebagai hospital pertama di Asia Tenggara yang memasang peranti pacemaker bebas wayar dua ruang AVEIR™ DR. Seramai 18 pesakit menerima implan ini sejak 27 Mei, menunjukkan kemajuan besar dalam rawatan jantung moden.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *