அன்வார் பதவி விலக வேண்டும்! - தலைநகரில் போராட்டம்

top-news
FREE WEBSITE AD

 ஷா ஆலம், ஜூலை 6: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 1 முதல் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விற்பனை மற்றும் சேவை வரியான SST விரிவாக்கம் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு போலீஸ் மேற்பார்வையில் பங்கேற்பாளர்கள் கூடத் தொடங்கினர், அன்வார் பதவி விலக வேண்டும, மக்கள் போராடுகிறார்கள் மற்றும் மக்கள் சுமையாக உள்ளனர் போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பெஜுவாங் தகவல் தலைவர் ரஃபீக் ரஷீத் அலி, பாஸ் இளைஞர் துணைத் தலைவர் ஹனிஃப் ஜமாலுதீன், சிலாங்கூர் பாஸ் இளைஞர் தலைவர் சுக்ரி உமர், கிளந்தான் பாஸ் இளைஞர் தலைவர் கமல் முகமது, முன்னாள் பிகேஆர் தலைவர் எசாம் நோர் மற்றும் மலேசிய இஸ்லாமிய மாணவர் கூட்டணி (காமிஸ்) தலைவர் அசாமுதீன் சஹார் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Lebih 300 orang sertai perhimpunan desak Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim letak jawatan, membantah kos sara hidup meningkat dan pelaksanaan SST. Pemimpin beberapa parti termasuk Pejuang, PAS dan KAMIS turut hadir, membawa sepanduk bantahan di bawah kawalan polis.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *