ஜொகூர் ஹெலிகாப்டர் விபத்து! கருப்புப் பெட்டியைத் தேடும் முயற்சி தீவிரம்

- Shan Siva
- 10 Jul, 2025
ஜொகூர், ஜூலை 10: ஜொகூர், கிளாங் பத்தாவில் உள்ள சுங்கை பூலாய் அருகே இன்று காலை விபத்துக்குள்ளான போலீஸ் ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பதில் போலீசார் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
மலேசிய சிவில்
விமானப் போக்குவரத்து ஆணையம், மலேசிய கடல்சார்
அமலாக்க நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப விசாரணை நிபுணத்துவம் பெற்ற பிற நிறுவனங்கள்
உட்பட பல நிறுவனங்களுடன் இணைந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
கூறினார்.
நதிப்படுகைக்குள்
மூழ்கியதாக நம்பப்படும் ஹெலிகாப்டரின் இடிபாடுகளை மீட்கும் முயற்சிகளும் நடைபெற்று
வருவதாக காலித் கூறினார்.
நீருக்கடியில்
நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிபுணத்துவம் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுவதால்,
ஹெலிகாப்டர் இடிபாடுகளை மீட்க சிறிது நேரம்
ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆறு சுமார் 25 அடி ஆழம் இருப்பதாகவும், இது மீட்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குகிறது என்றும் அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
Polis kini giat mencari kotak hitam helikopter yang terhempas di Sungai Pulai, Johor. Usaha mencari dibantu pelbagai agensi termasuk CAAM dan Maritim Malaysia. Operasi sukar kerana bangkai helikopter dipercayai tenggelam sedalam 25 kaki di dasar sungai tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *