ரஷிய அதிபா் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- Muthu Kumar
- 09 Dec, 2024
உக்ரைனுக்கு சுமாா் ஒரு பில்லியன் டாலா் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தாா்.கலிபோா்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் உள்ள ரொனால்ட் ரீகன் அதிபா் நூலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சட்டமியற்றுபவா்களின் வருடாந்திர கூட்டத்தில் லாய்ட் ஆஸ்டின் கலந்துகொண்டு பேசிய லாய்ட் ஆஸ்டின்
ரஷியாவுடன் போரிட உதவும் வகையில் 988 மில்லியன் டாலா் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும். இது உயா் இயக்க பீரங்கி ஏவுகணை அமைப்புக்கான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வெடிமருந்துகளை உள்ளடக்கியதாகும்.நீண்டகால ஆதரவுக்காக 'உக்ரைன் பாதுகாப்பு உதவி' முன்முயற்சியின் கீழ் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது. உடனடி தேவைகளுக்கு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட 725 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகள் விரைவில் பென்டகன் கையிருப்பில் இருந்து அனுப்பப்படும்.
கடந்த பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பின்னா் சுமாா் 62 பில்லியன் டாலா்களுக்கும் அதிகமான ராணுவ உதவிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளது என்றாா்.
அதிபா் ஜோ பைடனின் பாதுகாப்பு செயலாளராக ஆஸ்டின் கலந்துகொள்ளும் கடைசி முக்கியக் கூட்டம் இதுவாகும். குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஆஸ்டின் மற்றும் கென்டக்கி சென். மிட்ச் மெக்கானெல் ஆகியோா் தங்கள் வாழ்நாள் சேவைக்காக இந்தக் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டனா். ஆஸ்டின் 41 ஆண்டுகளுக்கும் மேலாக சிப்பாய் முதல் ஜெனரல் பதவி வரை பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளை அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப் தொடா்வாரா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு ஆஸ்டின்
பைடன் நிா்வாகம் உக்ரைனை வலுப்படுத்த மீதமுள்ள அனைத்து உதவி நிதிகளையும் செலவிட முயல்கிறது. இதைத் தொடர வேண்டுமா என்பது குறித்து டிரம்ப் நிா்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.நோட்ரே டாம் தேவாலயத்தை மீண்டும் திறப்பதற்காக சனிக்கிழமை பாரீஸ் சென்ற டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி மற்றும் பிரான்ஸ் அதிபா் மேக்ரான் ஆகியோருடன் அவசர சந்திப்பு நடத்தினாா்.
அப்போது, உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவைத் தொடர வேண்டும் என பிரான்ஸ் அதிபா் மேக்ரான் மற்றும் பிற ஐரோப்பிய தலைவா்கள் டிரம்ப்பை வலியுறுத்தினா். ஆனால், ரஷிய அதிபா் புதினைப் போற்றும் ட்ரம்ப், உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை விமா்சித்ததோடு, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளாா் என்றாா்.
1,000 நாள்களுக்கும் மேலாக ரஷியா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த அமெரிக்காவின் புதிய அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தாா்.பிரான்ஸ் அதிபா் மேக்ரான் மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி உடனான சந்திப்பைத் தொடா்ந்து சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில்,
ஆயிரக்கணக்கான வீரா்களை ரஷியா மற்றும் உக்ரைன் இந்தப் போரில் இழந்துள்ளன. உடனடியாக போா் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும். பல உயிா்கள் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. பல குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. ரஷிய அதிபா் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *