11 நிறுவன முதலாளிகள் கைது! – Imigresen அதிரடி!

- Sangeetha K Loganathan
- 08 May, 2025
மே 8,
நாடு முழுவதும் தேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியதாக நம்பப்படும் 11 நிறுவனங்களின் முதலாளிகளைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 இடங்களில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri bin Embok Taha தெரிவித்தார்.
மொத்தம் 2,756 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1,270 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் முறையான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக நம்ப வைத்து ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய சம்மந்தப்பட்ட 11 நிறுவனங்களின் முதலாளிகளையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri bin Embok Taha தெரிவித்தார். கடப்பிதழ்கள் காலாவதியாகியும் பணிக்கான ஒப்பந்தங்கள் ஏதுமின்றியும் சுற்றுலா கடப்பிதழில் வெளிநாட்டினர்களை மலேசியாவுக்கு வரவழைத்து பணிக்கு அமர்த்தியது போன்ற பல்வேறும் குடிநுழைவு விதிகளை மீறியதற்காக நிறுவன முதலாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri bin Embok Taha தெரிவித்தார்.
Imigresen Malaysia menahan 11 majikan syarikat yang disyaki menggaji pendatang asing tanpa izin dalam operasi serentak di 16 lokasi. Seramai 1,270 warga asing turut ditahan dalam operasi melibatkan 2,756 pemeriksaan, menurut Tuan Jafri bin Embok Taha.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *