நூருல் இஸ்ஸா அன்வாருக்குப் பெருகும் ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

கோத்த பாரு, மே 8: விரைவில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நூருல் இஸ்ஸா அன்வாருக்கு கிளந்தான் மாநிலத்தின் 14 தொகுதித் தலைவர்களில் 13 பேர் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியை மேலும் வலுப்படுத்தக்கூடிய தலைவராக விளங்குவதில் இஸ்ஸாவுக்கு உள்ள  அனுபவம் காரணமாக இந்த ஆதரவை தாங்கள் வழங்கியதாகக் கிளந்தான் மாநில தலைமைத்துவ மன்றத்தின்  தலைவர் டத்தோஸ்ரீ முகமது சுபராடி முகமட் நூர் கூறினார்.

அரசியலில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மற்றும்  எப்போதும் அடிமட்ட மக்களுடன் இருக்கும்  ஆளுமை மூலம் அதிகரித்து வரும் சவாலான அரசியல் சூழலை எதிர்கொண்டு கட்சியை மிகவும் பயனுள்ள திசையில் வழிநடத்த நூருல் உதவ முடியும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

2025 பி.கே.ஆர் மத்திய தலைமைத்துவ மன்றம், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு இணையம் வழி நடைபெறும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Nurul Izzah Anwar menerima sokongan 13 daripada 14 ketua cabang PKR Kelantan untuk bertanding jawatan Timbalan Presiden, berikutan pengalaman dan kepimpinannya dalam mengukuhkan parti menghadapi cabaran politik semasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *