இந்தியாவுக்கு வரவேண்டாம்! - புது டெல்லி மலேசியத் தூதரகம் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, மே 8: இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவும் சூழலில்,  இந்தியாவிற்குச் செல்லும் அத்தியாவசியமற்ற பயணங்களை மலேசியர்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று புதுடெல்லியில் உள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு, குறிப்பாக பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு, அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் உடனடியாக ஒத்திவைக்குமாறு தூதரகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

விடுமுறை நாட்கள் அல்லது பிற அவசரமற்ற நோக்கங்களுக்கான பயணங்களும் இதில் அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது!

India dan Pakistan tegang, Kedutaan Malaysia di New Delhi nasihatkan rakyat Malaysia tangguh semua perjalanan tidak penting ke India, terutama berhampiran sempadan Pakistan. Langkah ini bagi keselamatan rakyat semasa ketegangan operasi ketenteraan India.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *