மருத்துவத் துறை சுமையாக மாறக்கூடும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 8: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ செலவைக் குறைக்கவும், மருத்துவக் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், ஆசியான் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சைகளை உருவாக்கவும் ஆசியான் முழுவதும் உள்ள தங்கள் சகாக்களுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசிய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான CRM  மற்றும் பிற உள்ளூர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆராய்ச்சி முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் மக்களின் தேவைகளுக்கு சேவை செய்வதையும் உறுதிசெய்ய, CRM உள்ளூர் பல்கலைக்கழகங்களுடன், குறிப்பாக மருத்துவ பீடங்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

சுகாதாரச் செலவுகள் அதிகரிப்பதைத் தடுப்பதே நமது முக்கிய சவால்களில் ஒன்றாகும். முக்கிய நிறுவனங்கள் நுகர்வோர் மீதான சுமையைக் கருத்தில் கொள்ளாமல் அதிக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால்,  மருத்துவத் துறை சுமையாக மாறக்கூடும் என்று அவர் இன்று CRM சோதனை இணைப்பு மாநாடு 2025 இன் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கூறினார்!

Perdana Menteri Anwar Ibrahim menyeru CRM dan institusi penyelidikan perubatan tempatan bekerjasama dengan ASEAN bagi kurangkan kos rawatan, percepat penemuan perubatan, dan cipta rawatan mengikut keperluan rantau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *