பங்சாரில் மரம் விழுந்து 2 கார்கள் சேதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 9-

நேற்று பிற்பகலில் பெய்த கன மழையின்போது, கோலாலம்பூர், பங்சாரில் உள்ள பெனாகா சாலையில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்த சம்பவத்தில், அச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமுற்றன.

பிற்பகல் சுமார் 3 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின்போது அம்மரம் அங்குள்ள இரண்டு வீடுகளுக்கு முன்புறத்தில் விழுந்து சாலையை மூடியதாகவும் அதில் ஒரு பெரோடுவா மைவியும் ஒரு மிட்ஷுபிஸி காரும் சேதமடைந்ததாகவும், கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா அதிகாரி ராம்லி முஹமட் தெரிவித்தார்.

அதில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், சாலையில் விழுந்திருந்த மரம் உடனடியாக அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Kuala Lumpur, Bangsar di Jalan Penaga, sebatang pokok besar tumbang akibat hujan lebat semalam, merosakkan dua kereta yang diletak berhampiran rumah. Tiada kecederaan dilaporkan dan pokok telah dialihkan segera.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *