மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 சிறுமிகள் காயம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, மே 2-

புக்கிட் கட்டிலிலுள்ள டேமாங் ஹுசேன் தேசியப்பள்ளிக்கு அருகில் நிகழ்ந்த மோதி விட்டுத் தப்பிச் சென்ற கோர விபத்தில் 2ஆம் ஆண்டு மாணவிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்ட வேளையில், அவளுடைய அக்காவுக்கு உடலின் சில பாகங்களில் காயம் ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நுர் கஷிஃபா ஹஸ்லினா முகமட் ஹாயிடர், (வயது 8) மற்றும் அவளுடைய அக்காவான நுர் கரினா ஹஸிரா, (வயது 17) ஆகியோர் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் தெரிவித்தார்.

அந்த விபத்து தொடர்பில் நேற்று நண்பகல் 12.32 மணிக்கு அச்சிறுமியின் அக்கா போலீஸ் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.

அச்சிறுமி செய்த புகாரின்படி யமாஹா எக்கோ சோலரிஸ் ரக மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்து டேமாங் ஹுசேன் தேசியப்பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தங்கையை ஏற்றிச் சென்ற போது இவர்கள் டுயோங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்பள்ளியைக் கடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதியது.

இந்த மோதலினால் அவர்கள் இருவரும் தவறி கீழே விழுந்து விட்டனர்.இதில் சிறுமிக்கு முகம், கண்ணிலும் நெற்றியிலும் காயமேற்பட்டது. புகார் செய்த அக்காவுக்குக் கை, கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 42(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக செய்தியாளர்களிடம் பேசிய போது ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் குறிப்பிட்டார்.

Di Melaka, dua beradik cedera dalam kemalangan jalan raya di dekat Sekolah Kebangsaan Temiang Hussein. Nur Kashifa (8) cedera di muka dan dahi, manakala kakaknya Nur Karina (17) cedera ringan. Polis kini sedang mencari pemandu yang terlibat.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *