சீனர்களின் ஆதரவு குறைகிறது! - ரஃபிஸி எச்சரிக்கை

- Shan Siva
- 13 May, 2025
கோலாலம்பூர், மே 13: பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லி, சீன வாக்காளர்களிடையே கட்சி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) மீதான ஆதரவு குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாற்றத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) முக்கிய இடங்களை
இழக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
சீன
ஆதரவாளர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களில் முப்பத்திரண்டு சதவீதம்
பேர் PH அல்லது PKR
க்கு வாக்களிக்க மாட்டோம்
என்று தெரிவித்துள்ளதாக ரஃபிஸி சுட்டிக்காட்டினார்.
இந்திய
வாக்காளர்களிடையேயும் இதே பிரச்சினை உருவாகி வருவதாக ரஃபிஸி கூறினார்.
வாக்காளர்
விரக்திகளை PH கவனத்தில் கொண்டு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விலைவாசிகள் உயர்ந்தால், 'எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கைச் செலவு மக்களைப் பாதித்தால், அதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்!
Rafizi Ramli memberi amaran tentang sokongan yang semakin merosot daripada pengundi Cina dan India terhadap PKR dan Pakatan Harapan. Beliau menegaskan keperluan menangani isu kos sara hidup dan kekecewaan rakyat agar tidak kehilangan kerusi penting pada Pilihan Raya Umum ke-16.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *