MH 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - ஐ.நா

- Shan Siva
- 13 May, 2025
கோலாலம்பூர், மே 13: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான
எம்.எச்.17
விமானம் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே
காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) போக்குவரத்து மன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.
இந்த
விபத்துக்கான காரணம் தொடர்பான ஐ..நா.வின் முடிவை டச்சு மற்றும் ஆஸ்திரேலிய
அரசாங்கங்கள் தனித்தனி அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 298 பயணிகளுடம் பயணித்த எம்.எச்.17 விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 17ஆம் தேதி உக்ரேன்
வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில்
196 டச்சு பயணிகளும் 38 ஆஸ்திரேலிய பயணிகளும் இருந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான இழப்பீட்டை வழங்குவது என்பது குறித்து அனைத்துலக பொது வான் போக்குவரத்து மன்றம் எதிர்வரும் வாரங்களில் முடிவெடுக்கும் என அவ்விரு அரசுகளும் தெரிவித்துள்ளன.
MH17 pesawat milik Malaysia Airlines yang ditembak jatuh pada 2014 disahkan dilakukan oleh Rusia, menurut Majlis Pengangkutan PBB. Pengumuman itu disahkan oleh kerajaan Belanda dan Australia. Keputusan mengenai pampasan kepada mangsa akan ditentukan oleh pihak berkuasa antarabangsa dalam masa terdekat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *