ஜொகூரில் 330 வெளிநாட்டினர் கைது!

- Shan Siva
- 08 May, 2025
ஜொகூர் பாரு, மே 8: ஜொகூர் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட
தொடர் சோதனைகளில் பல்வேறு நாட்டினரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜொகூர் பாரு, மூவார், செகாமட், மெர்சிங் மற்றும்
பத்து பஹாட் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமான இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட
நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர்
டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
நேற்று காலை 10.30 மணியளவில் ஐந்து மாவட்டங்களிலும் ஒரே
நேரத்தில் 120 அமலாக்க
அதிகாரிகள் பங்கேற்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த
நடவடிக்கையின் போது மொத்தம் 516 வெளிநாட்டினரிடம்
சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 330 பேர் சந்தேகத்திற்குரிய குடியேற்றக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
20 முதல் 57 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் வங்கள தேசம்,
இந்தோனேசியா, மியன்மார், பாகிஸ்தான்
மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
அனைவரும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக பெக்கான் நனாஸ் குடிநுழைவுத்துறை டிப்போவில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்!
Serbuan di lima daerah Johor menyaksikan 330 warga asing ditahan atas kesalahan imigresen. Seramai 516 diperiksa di tapak binaan oleh 120 pegawai penguat kuasa. Mereka dari Bangladesh, Indonesia, Myanmar, Pakistan dan Vietnam. Siasatan lanjut dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *