சுற்றுலா மோசடியில் 'Summer Happy Enterprise' 34 பேர் ஏமாற்றம், வெ.3.38 லட்சம் இழப்பு!

- Muthu Kumar
- 08 May, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, மே 8-
சீனாவிற்கு சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்வதாக கூறி 'Summer Happy Enterprise' தனியார் நிறுவனம் மூலம் பொதுமக்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஜொகூர் காவல் துறை புகார்கள் கிடைத்துள்ளன. ஜொகூர் போலீசாரின் தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து இதுவரை மொத்தம் 34 புகார் மனுக்கள் கிடைத்துள்ளன. இந்த மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த இழப்பு தொகை வெ. 338,080 ஆகும் என ஜொகூர் காவல்துறை தலைவர் டத்தோ மு. குமார் தெரிவித்தார்.
தற்காலிகமாக பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பயண தேதிகள் நெருங்கும் நிலையில் சந்தேக நபர்களை தொடர்புகொள்வதில் தோல்வியடைந்த பிறகே, அந்த பயணிகள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக கூறினார். இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. போலீசார் தற்போது இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
ஜொகூர் காவல்துறை இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடம், அதிகபட்சமாக 10 வருடம் வரையிலான சிறைத்தண்டனை. அபராதம் மற்றும் இரண்டும் விதிக்கப்படும். ஜொகூர் மாநில மக்கள் உஷாராக இருக்குமாறு டத்தோ எம்.குமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இந்த வழக்கில் ஏதேனும் தகவல் உள்ளவர்கள் உடனடியாக போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Syarikat Summer Happy Enterprise didakwa menipu orang ramai dalam urusan pelancongan ke China. Sebanyak 34 aduan diterima melibatkan kerugian RM338,080. Polis kini menyiasat kes ini di bawah Seksyen 420 Kanun Keseksaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *