தலைநகரில் அடிமையாக வேலை செய்து வந்த 8 வெளிநாட்டினர் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 09 May, 2025
மே 9,
சிலாங்கூரில் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட 3 வெவ்வேறு சோதனைகளில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதுடன் கொடுமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டினர்களும் மீட்கப்பட்டுள்ளனர். Pantai Dalam கட்டுமானப் பகுதியில் கொடுமைப்படுத்தப்பட்ட 8 வெளிநாட்டு ஆடவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PUCHONG UTAMA பகுதியில் உள்ள வாகனப் பட்டறையில் கொடுமைப்படுத்தப்பட்ட 14 முதல் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் மீட்கப்பட்டதுடன் கார் பட்டறையின் முதலாளி என நம்பப்படும் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள மற்றொரு கார் பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga serbuan oleh Jabatan Imigresen di Selangor berjaya menyelamatkan 8 lelaki warga asing yang dijadikan buruh paksa di tapak binaan Pantai Dalam dan 3 remaja lelaki di bengkel kereta Puchong. Seorang majikan turut ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *