சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 5 வெளிநாட்டினர் உட்பட உள்ளூர் ஆடவர் கைது!

top-news

மே 8,

இந்தோனேசியாவிலிருந்து முறையான ஆவணங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்த 5 வெளிநாட்டினர்களையும் அவர்களைப் பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து வந்த உள்ளூர் ஆடவர் ஒருவரும் சரவாக் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சரவாக் லுண்டுவில் உள்ள Kampung Biawak காட்டுப் பகுதியின் மலேசிய இந்தோனேசிய எல்லையைக் கடந்து வந்ததாக நம்பப்படுகிறது.

சம்மந்தப்பட்ட 5 இந்தோனேசியர்களும் தலா RM400 முதல் RM500 வரையில் பணம் செலுத்தி உள்ளூர் ஆடவரின் உதவியுடன் மலேசியாவுக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூர் ஆடவரின் வாகனத்தையும் கைப்பேசிகளையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் பல முறை வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக அழைத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 5 இந்தோனேசியர்களையும் 1 உள்ளூர் ஆடவரையும் மேலதிக விசாரணைக்காகச் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lima warga Indonesia yang masuk ke Malaysia secara haram melalui sempadan Kampung Biawak, Sarawak, ditahan bersama seorang lelaki tempatan yang membawa mereka. Kesemua mereka dipercayai membayar RM400–RM500 untuk bantuan masuk tanpa dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *