ஆன்லைன் மோசடியில் RM 1 லட்சத்துக்கும் மேல் இழந்த 63 வயது பெண்!

top-news
FREE WEBSITE AD

கூலாய், மே 9: கூலாயில் ஓய்வு பெற்ற ஒரு பெண், இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் சேர ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்டதால், RM102,000 இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 வயதான அந்தப் பெண் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த மூன்று நாட்களுக்குள் 10% முதல் 20% வரை லாபத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், பின்னர் லாபம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் அப்பெண், இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மார்ச் 19 முதல் ஏப்ரல் 23 வரை பாதிக்கப்பட்டவர் ஒரு உள்ளூர் வங்கிக் கணக்கில் RM102,000 மதிப்புள்ள எட்டு பரிவர்த்தனைகளைச் செய்ததாக ACP டான் கூறினார்.

பரிவர்த்தனைகளை முடித்ததும், பாதிக்கப்பட்டவர் தனது கணக்கைச் சரிபார்த்தபோது, ​​திரையில் காட்டப்பட்டது போல் RM170,000 லாபம் ஈட்டியிருப்பதைக் கண்டறிந்தார்.

லாபத்தை எடுக்க விரும்பினார், ஆனால் கூடுதலாக RM40,000 வங்கியில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார் என்று ACP டான் மேலும் கூறினார்.

 பாதிக்கப்பட்டவர் பணத்தை எடுக்கத் தவறிய பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும், வியாழக்கிழமை காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து ,தெரியாத நபர்களுடன் நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது,  எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு பொதுமக்களுக்கு ACP டான் நினைவூட்டினார்!

Seorang wanita bersara berusia 63 tahun di Kulai kerugian RM102,000 selepas ditipu oleh sindiket pelaburan palsu. Mangsa dijanjikan pulangan lumayan tetapi diminta membayar tambahan RM40,000. Polis menasihatkan orang ramai lebih berwaspada.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *