Treler லாரியை மோதி தம்பி பலி! அக்காள் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 03 May, 2025
மே 3,
நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டியான 20 வயது இளம்பெண் படுகாயம் அடைந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த அவரின் 18 வயது தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொகூர் பாரிவிலிருந்து Ayer Hitam செல்லும் சாலலையில் நேற்றிரவு 9.33 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் BALVEER SING தெரிவித்தார்.
TRELER லாரியை இடது பக்கமாக முந்தும் போது மோட்டார் சைக்கிள் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதாகவும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 18 வயது இளைஞர் லாரிக்கடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் BALVEER SING தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Satu kemalangan maut melibatkan sebuah motosikal dan treler berlaku di jalan dari Parit ke Ayer Hitam, Johor. Penunggang wanita berusia 20 tahun cedera parah, manakala adiknya yang berusia 18 tahun maut di tempat kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *