ரஃபிஸி பணிக்குத் திரும்பினார்!

- Muthu Kumar
- 07 May, 2025
கோலாலம்பூர், மே 7-
நீண்ட நாள் விடுமுறையில் சென்றிருப்பதாகக் கூறப்பட்ட பொருளாதாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி நேற்று பணிக்குத் திரும்பினார்.ரஃபிஸி பணிக்குத் திரும்பி இருப்பதை, பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டு பிடிப்புத்துறை அமைச்சருமான சாங் லொ காங், நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த, ஜப்பானின் முன்னாள் பிரதமர் கிஷிடா ஃபுமியோவுடனான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ரம்லி மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ரூல் அஜிஸ் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். "ஆதலால், அவர் (ரஃபிஸி) பணிக்குத் திரும்பி விட்டார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று, புத்ராஜெயாவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சாங் தெரிவித்தார்.
Menteri Ekonomi Rafizi Ramli telah kembali bertugas semalam selepas cuti panjang, disahkan oleh Menteri Sains Chang Lih Kang yang turut menghadiri acara rasmi bersama Rafizi dan Perdana Menteri di Putrajaya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *