பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் இராணுவம்!

- Muthu Kumar
- 08 May, 2025
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அவரின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினரே பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி உள்ளனர்.பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியது இருக்கிறது.
தீவிரவாதிகள் முகாமுக்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை என்றும், தீவிரவாதிகள் முகாம் என்பது கற்பனையான முகாம்கள் தான் என்று கூறி வந்த பாகிஸ்தான் அரசு, தடைவிதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இருவரின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளே பங்கேற்றிருப்பது ஒரு புதிய சர்ச்சையை ஏற்ப ஏற்படுத்தியது இருக்கிறது.
அந்த காணொளியில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதி சடங்கில் ஏராளமான ராணுவ சீருடை அணிந்த அதிகாரிகளும், அந்த ராணுவ அதிகாரிகள் சவப்பெட்டியை தூக்கிக் செல்லக்கூடிய காட்சி பதிவாகி இருக்கிறது. அந்த இடமே யாரோ ஒரு முக்கியத் தலைவர் இறந்தால், எப்படி அரசு தரப்பில் மரியாதை அளிக்கப்படுமோ, அதே அளவுக்கு அந்த ஜேசி முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி யாகூப் முகலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய முக்கியமான தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஒரு டெரெக்டரியாக இருந்து அங்கு தீவிரவாதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போல செயல்படுகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த சூழ்நிலையில், இன்று தாக்குதல் நடத்திய போதும் அது கற்பனையான தீவிரவாத முகாம்கள் தான்,தீவிரவாத முகாம்களே பாகிஸ்தானில் இல்லை என்று கூறியது.
ஆனால் முக்கிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த கொல்லப்பட்ட யாகோப் முகல் இறுதி சடங்கில் பாகிஸ்தான் அரசுத்துறை அதிகாரி பங்கேற்று இருப்பது, இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு அரசுக்கும் இடையே உள்ள அந்த தொடர்பை காண்பிக்க கூடியதாக அமைந்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *